பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 முறை கூறியும் மீட்டும் மீட்டும் தலையிற் கால்வைத்த அவர் சிவபெருமானே என்பதை உணர்ந்த ஆரூார், “தம்மானை அறியாத சாதியார் உளரோ என்ற திருப்பதி கத்தைப் பாடியருளினர். - - அப்பால் பலதலங்களைத் தரிசித்துக்கொண்டு சொற் றமிழ் பாடிச் சிதம்பரம் சென்று பணிந்தார். அங்கே இறைவர், 'திருவாரூருக்கு வா’ என்று அசரீரியாகப் பணித்தமையால் அத்தலத்தை நோக்கிப் புறப்பட்டார். சீகாழிக்குப் பக்கத்தில் வந்ததும் ஞானசம்பந்தசுவாமிகள் அவதரித்த தலமாதலின் மிதிக்க வொண்ணுதென்று புறம்பே கிற்கச் சிவபெருமான் காட்சி கொடுத்தருளினர். "சாதலும் பிறத்தலும் தவிர்த்து' என்னும் பதிகம் பாடிப் பணிந்து மேற்சென்றனர் ஆரூார். - திருக்கோலக்கா முதலிய தலங்களுக்கு எழுந்தருளி இறைவரைப் பணிந்து பதிகம்பாடித் திருவாரூரை அனுகு கையில் சிவபிரான் ஏவலால் அத்தலத்திலுள்ளார் நம்பியா ரூரை எதிர்கொண்டு திருக்கோயிலுக்கு அழைத் 'துச் சென்றனர். திருக்கோயில் சென்று வன்மீகநாதரை வழிபட்டனர். அப்பெருமான், 'நீ எனக்குத் தோழன். என்றும் நீ மணக்கோலத்தோடு இருப்பாயாக’ என்று கட்டளையிட்டருளினர். அது முதல் தம்பிரான் தோழர் என்ற திருநாமம் நம்பியாரூாருக்கு அமைந்தது. தம்பிரான் தோழர் திருவாரூரிலே தங்கி நாள் தோ அறும் திருக்கோயில் சென்று வழிபட்டுவந்தார். திருக்கை லையில் கமலினியாக இருந்தவர் அத்தலத்தில் உருத்திர கணிகையர் குலத்தில் தோன்றிப் பரவையார் என்ற திரு நாமத்தோடு வளர்ந்து, திருக்கோயிற் பணிபூண்டு ஒழுகி