பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 தேவார ஒளிதெறி (சுந்தார்) எனவரும் சிவஞானமுனிவரின் திருவாக்கு என் உள்ளத்தில் அழுந்திக் கிடந்த காரணத்தால் எழுதப்பெற்ற இவ்வொளி நெறிப் பகுதிகளேச் சைவ உலகத்துக்குப் பயன்படச் செய்த பெருமை சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துக்கே உரிய தாகும். இக் கழகத்துக்கு உயிர்காடியாயுள்ள தலைவர் சைவத் திருவாளர் வ. சுப்பைய பிள்ளேயவர்களும் அவருக்கு உறுதுணை யாய் கிற்கும் கழக உறுப்பினராம் பெரியோர்களும், இறைவன் திருவருளால் நோயின்றிப் பல்லாண்டு வாழி, வாழி, வாழி என வாழ்த்துதல் அன்றி வேறு எவ்வகையில் எனது நன்றியை நான் தெரிவிக்கக்கூடும். ' அன்றுவன் செங்கலை அம்பொன் ஆக்கிய தென்றமிழ் நாவலன் தீய என்னையும் துன்றிய நலம் திகழ் தாயன் ஆக்குவன் என்றவன் இணையடி இறைஞ்சு வேனாோ.' -சானந்த கணேச புராணம். ' வழிவிடுத்த தொருகதி,ஒண் பொன்கொணர்ந்த தோராறு, வரும்பொன் வாங்கிக் கழிகொடுத்த தொருபொய்கை, அளித்ததொரு கயம்காவு காந்த சேயை மொழிவசத்திற் கவைபோல்இப் பரவையினங் குவதரிது முதல்வா ! என்று விழிதரித்தும் அரிகானப் பாதனைத்தா தேவினனை விழைந்து வாழ்வாம்.” -திருக்கழுக்குன்றப் புராணம். திருச்சிற்றம்பலம். 298, லிங்க செட்டித் தெரு, சென்னை-1, வ. சு. செங்கல்வராய பிள்ளை. 12-9-1963. = "