பக்கம்:தைத் திங்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88 தைத் திங்கள்

சைவத்தில்,மாணிக்கவாசகரின் திருவெம்பாவை இருபது பாடல்களும் திருப்பள்ளியெழுச்சி பத்துப் பாடல்களும் கொண்டவை; இந்த முப்பது பாடல்களும் சைவர் களால் மார்கழித் திங்களில் ஓதப்படுகின்றன. நாடோறும் முப்பதையும் ஓதுவதும் உண்டு; நாளுக்கு ஒன்றாக விளக்கவுரையாற்றுவதும் உண்டு. மார்கழித் திங்களில் திருப்பாவை-திருவெம்பாவை மாநாடுகளும் சிறப்புக் கூட்டங்களும் இன்று பல்வேறிடங்களிலும் நடைபெறுவதையும் காண்கிறோம். மார்கழியில் வைகறையில் நீராடி ஓதி வழிபாடாற்றுவதற்கு இப் பாடல்கள் பெரிதும் பயன்படுகின்றன.

திருப்பாவையும் திருவெம்பாவையும் பாவைப் பாட்டு வகையைச் சார்ந்தனவாகும். பாவையர் பாவை யரைப் 'பாவாய்-பாவாய்' என விளித்து முடித்துப் பாடுவதுபோல் அமைந்தன. இவை. பாவைப்பாட்டைப் பற்றித் தொல்காப்பிய உரைகளில் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் குறிப்பிட்டுள்ளனர். தொல் காப்பியம் - செய்யுளியலில் உள்ள 'தரவின்றாகித் தாழிசை பெற்றும்' என்னும் (149-ஆம்) நூற்பாவின் உரையில்,

"...இது மேலைக் கொண்டும் அடிப்பட வந்த மரபு. இவையெல்லாம் நான்கடியுள் வருதலே பெரும் பான்மையெனக் கொள்க. எனவே, சிறுபான்மை பாவைப் பாட்டும் அம்மனைப் பாட்டும் முதலாயின நான்கடியின் இகந்து வருவனவாயின."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/105&oldid=1323538" இலிருந்து மீள்விக்கப்பட்டது