பக்கம்:தைத் திங்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96 தைத் திங்கள்

என்னும் (8-ஆம்)பாடல் பகுதியாலும்,முத்தொள்ளாயி ரத்தின் முகப்பிலுள்ள,

“மன்னிய நாண்மீன் மதிகனலி யென்றிவற்றை
முன்னம் படைத்த முதல்வனைப்-பின்னரும் ஆதிரையான் ஆதிரையான் என்றென்றயருமால்
ஊர்திரைநீர் வேலி உலகு’

என்னும் காப்புச் செய்யுளாலும் நன்கறியலாம். இன்னும் திவாகர நிகண்டில்-தெய்வப் பெயர்த் தொகுதியில்,

"மூதிரை, செங்கை, யாழ், ஈசர்தினம், என
ஆதிரை தன்பெயர் ஆகும் என்ப"

எனவும், பிங்கல நிகண்டில்-வானவர் வகை என்னும் தொகுதியில்,

“அரன்நாள், செங்கை, மூதிரை, ஆதிரை"

எனவும், ஆதிரை சிவனுக்கு உரிய நாளாகக் கூறப்பட் டுள்ளமை காண்க.

சைவர்க்குப் போலவே, வைணவர்க்கும் மார்கழியும் மார்கழி ஆதிரையும் சிறப்பானவையாகும். கண்ண பிரான், மாதங்களுள் தான் மார்கழியாய் ('மாசானாம் மார்க்க சீஷம்') இருப்பதாகக் கீதையில் கூறியுள்ளார் என்பது அறிந்ததே. மார்கழியின் சிறப்பு குறித்து வைணவ நெறியில் எவ்வளவோ சொல்லப்பட்டுள்ளது. அதில் ஆண்டாளுக்கு நல்ல பங்கு உண்டு.

மார்கழியில் நீராடுதலின் மாண்பினை - அதிலும் சிறப்பாக ஆதிரை நாளில் நீராடுதலின் சீர்மையினை, ஆண்டாள் தமது திருப்பாவையில் அழகுறக் கூறியுள்ளார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/113&oldid=1323385" இலிருந்து மீள்விக்கப்பட்டது