பக்கம்:தைத் திங்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார் 101

விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப்
புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப
வெம்பா தாக வியனில வரைப்பென
அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர் முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப் பனிப் புலர்பு ஆடி...'

மேலுள்ள, 'ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து, மாயிருந் திங்கள் மறுநிரை ஆதிரை' என்னும் முதல் இரண்டடிகளுக்குப் பரிமேலழகர் எழுதியுள்ள உரைப் பகுதி வருமாறு:

"ஞாயிறு தெறாத கடை மாரியையுடைய மார்கழி மாதத்துத் திங்கள் மறுவொடு நிறைந்த திருவாதிரை நாளின்கண், திருவாதிரை நிறைமதி நாளாங்கால் ஆதித்தன் பூத்தடத்தின்கண் (பாட வேறுபாடு; பூராடத்தின்கண்) நிற்குமாதலின் அதனையுடைய மார்கழி மாதம் குளம் எனப்பட்டது."

மார்கழிக்குக் 'குளம்' என்னும் பெயர் உள்ளமை யைப் பரிபாடலாலும், அப்பெயர்க் காரணத்தைப் பரிமேலழகர் உரையாலும், அறிகிறோம். எனவே, 'ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து' என்னும் அடி 'மார்கழி மாதத்தில்' என்னும் பொருள் தருகிறது. அடுத்து - 'மாயிருந் திங்கள் மறுநிறை ஆதிரை' என்னும் அடி, முழு நிலாப் பருவத்தோடு கூடிய ஆதிரை என்னும் பொருள் தருகிறது. முழு நிலா நாளில் நிலாவின் (சந்திரனின்) நடுவே உள்ள மறு என்னும் களங்கம் முற்றிலும் நிறைந்து தெரியுமாதலின 'திங்கள் மறுநிறை ஆதிரை' எனப்பட்டது. இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/118&oldid=1321686" இலிருந்து மீள்விக்கப்பட்டது