பக்கம்:தைத் திங்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104 தைத் திங்கள்


உய்யுமாங் கொலோ என்று சொல்லி
     உன்னையும் உம்பியையும் தொழுதேன் வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை
     வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே"

(1)


"வெள்ளைநுண் மணற்கொண்ட
தெருவணிந்து
    வெள்வரைப் பதன்முன்னம் துறைபடிந்து
முள்ளுமில் லாச்சுள்ளி யெரிமடுத்து
    முயன்றுன்னை நோற்கின்றேன் காமதேவா
கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக் கொண்டு
    கடல்வண்ணன் என்பதோர் பேரெழுதிப் புள்ளினை வாய்பிளந் தானென்பதோர்
    இலக்கினில் புகவென்னை யெய்கிற்றியே"

(2)

தாம் விரும்பும் கணவர் கிடைக்கும்படிச் செய்யு மாறு கன்னியர் தைத் திங்களில் நீராடி காமனுக்கு நோன்பிருப்பர், என்னும் செய்தி இப்பாடல்களால் அறியப்படுகின்றது. திவாகரத்திலும் பிங்கலத்திலும் பெண்பால் பிள்ளைப்பாட்டின் உறுப்புக்களுள் ஒன்றாகக் காமன் நோன்பு கூறப்பட்டிருப்பது ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது.


"ஐங்கணைக் கிழவனை ஆர்வமொடு
 நோற்றலும்
 பணி நீர் தோய்தலும் பாவை
 யாடலும்......
 பேசிய பெண்பால் பிள்ளைப் பாட்டே"

என்பது நிகண்டு நூற்பா.


"ஆண்டீ ராறதில் எழில்காமன் நோன்பொடு
வேண்டுதல் தானுள விளம்பினர் புலவர்"

என்பது பன்னிரு பாட்டியல் (105) நூற்பா. திவாகரத் திலுள்ள 'ஐங்கணைக் கிழவனை ஆர்வமொடு நோற்றல்' என்பது காமன் நோன்பைக் குறிக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/121&oldid=1323554" இலிருந்து மீள்விக்கப்பட்டது