பக்கம்:தைத் திங்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

115


காலத்தில் ஞாயிறு நமக்குச் சிறிது வடபுறமாகச் சாய்ந்து தெரியும். ஆடித்திங்கள் தொடங்கி மார்கழித் திங்கள் வரையிலுமான ஆறு திங்கள் காலத்தில் நமக்குச் சிறிது தென்புறமாகச் சாய்ந்து தெரியும். வடபுறமாகத் தெரியும் ஆறு திங்கள் காலத்தை 'உத்தராயணம்' என்றும், தென்புறமாகத் தெரியும் ஆறு திங்கள் காலத்தைத் 'தட்சணாயணம்' என்றும் வடமொழியில் கூறுவர், உத்தரம் என்றால் வடக்கு; அயணம் என்றால் செலவு-செல்லுதல்; உத்தராயணம் என்றால், தென்புறத்திலிருந்து வடபுறம் நோக்கிச் செல்லுதல் என்று பொருளாம்.நாம் இதற்குத் தமிழில் 'வட செலவு' என்று பெயர் வழங்கலாம். தட்சணம் என்றால் தெற்கு; அயணம் என்றால் செலவு; தட்சணாயணம் என்றால், வடபுறத்திலிருந்து தென்புறம் நோக்கிச் செல்லுதல் என்று பொருளாம். நாம் இதற்குத் தமிழில் 'தென் செலவு’ என்று பெயர் வழங்கலாம்.

நில நடுக் கோட்டிற்கு (பூ மத்திய ரேகைக்கு) 231/20 பாகை வடக்காகக் 'கடக ரேகை' (Tropic of Cancer) உள்ளது என்பதும், இதுவே ஞாயிறு வடக்கே செல்லக்கூடிய எல்லை என்பதும், ஜூன் 21-ஆம் நாள் நடுப் பகலில் கடக ரேகையில் தலைக்குமேல் நேர் செங்குத்தாக ஞாயிறு காயும் என்பதும், அடுத்துநில நடுக்கோட்டிற்கு 231/20 பாகை தெற்காக மகர ரேகை (Tropic of Capricorn) உள்ளது என்பதும், இதுவே ஞாயிறு தெற்கே செல்லக்கூடிய எல்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/132&oldid=1323723" இலிருந்து மீள்விக்கப்பட்டது