பக்கம்:தைத் திங்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116 தைத் திங்கள்


என்பதும், டிசம்பர் 22-ஆம் நாள் நடுப் பகலில் மகர ரேகையில் தலைக்குமேல் நேர் செங்குத்தாக ஞாயிறு காயும் என்பதும், சில நூலில் படித்த இன்ன பிறவும் ஈண்டு ஒப்பு நோக்கற்பாலன.இனித் தைத் திங்களுக்கு வருவோம்.

தைத் திங்களில் ஞாயிறு வடபுறம் நோக்கிச் செல்லத் தொடங்குகிறது. அதனால், தைத் திங்கள் தொடக்கத்தை உத்தராயண புண்ணிய காலம் எனக் கூறிக் கொண்டாடுகின்றனர், தைத் திங்களிலிருந்து ஆனித் திங்கள் வரையும் வடபுறமாக இருந்து தென் புறத்தை நோக்கி ஞாயிறு காயும்; அதனால்தான் தென் சாரியிலுள்ள வடக்குப் பார்த்த வீடுகள் கோடைக் காலத்தில் வெப்பமுடையனவாகவும், வடசாரியிலுள்ள தெற்குப் பார்த்த வீடுகள் கோடையில் குளிர்ச்சி யுடையனவாகவும் உள்ளன. அடுத்து-ஆடித் திங்களில் ஞாயிறு தென்புறம் நோக்கிச் செல்லத் தொடங்குகிறது. அதனால் ஆடித் திங்கள் தொடக் கத்தைத் தட்சணாயண புண்ணிய காலம் எனக்கூறிக் கொண்டாடு கின்றனர்.ஆடியிலிருந்து மார்கழிவரை தென்புறமாக இருந்து வடபுறம் நோக்கி ஞாயிறு காயும். அதனால்தான் வடசாரியிலுள்ள தெற்குப் பார்த்த வீடுகள் மழைகுளிர் காலத்தில் வெதுவெதுப்பாகவும், தென் சாரியிலுள்ள வடக்குப் பார்த்த வீடுகள் வாடைக் குளிர்சாரல் உடையன வாகவும் உள்ளன. தெற்குப் பார்த்த வீடுகளின் சிறப்பு இப்போது புலனாகும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/133&oldid=1323724" இலிருந்து மீள்விக்கப்பட்டது