பக்கம்:தைத் திங்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128 தைத் திங்கள்


என அகப்பொருள் விளக்கமும், ஆவணித்திங்களாகிய கார்ப் பருவத்தையே முதலில் கூறியுள்ளன. மற்றும்,


"ஆவணி முதலா இரண்டிரண் டாக
மேவின திங்கள் எண்ணினர் கொளலே,”

எனத் திவாகர நிகண்டும்,


"மருவும் ஆவணியே ஆதி மற்றிரண் டிரண்டு மாதம்
 பருவம் மூவிரண்டும் ஆய்ந்து பார்த்திடின் வாய்த்த பேராம் "

எனச் சூடாமணி நிகண்டும் ஆவணித் திங்களையே முதலில் தொடங்கியிருப்பது ஈண்டு ஒப்பு நோக்கற் பாலது.

தைப் பிறப்பு:

ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட தெனக் கூறப்படும் தொல்காப்பியம் முதலான பழந்தமிழ் நூல்களில் ஆவணியே முதலிடம் பெற்றிருப்பதை நோக்குங்கால், பழந் தமிழ் மக்களின் பழக்க வழக்கத்தை அடிப்படையாகக் கொண்டே அந்நூல்களில் அவ்வாறு சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பது புலனாகும். சித்திரையினும் ஆவணிக்கே தமிழ் நூல்கள் முதலிடம் தந்துள்ளன. இந்நிலையில், தைத் திங்களைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கூறுவது எங்ஙனம் பொருந்தும்?

உலக வரலாற்றை நோக்குங்கால், ஆண்டு அமைப்பும் திங்கள் அமைப்பும் காலத்துக்குக் காலம் வேறுபட்டிருப்பது புலனாகும், இப்போது சனவரி முதல் டிசம்பர் ஈறாகப் பன்னிரண்டு திங்கள் அமைத்துச் சொல்லப்படும் மேலை நாட்டு ஆண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/145&oldid=1323739" இலிருந்து மீள்விக்கப்பட்டது