பக்கம்:தைத் திங்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

129


அமைப்பு பழங் காலத்தில் இந்த முறையில் இல்லை. எத்தனையோ முறை பல மாறுதல்கள் பெற்ற பின்னரே இப்போதுள்ள முறை நிலை பெற்றதாகச் சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் மார்ச்சு திங்கள் முதல் நாள் ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளப் பட்டிருந்தது. மார்ச்சு 25-ஆம் நாள் ஒரு காலத்திலும், டிசம்பர் 25-ஆம் நாள் ஒருகாலத்திலும் புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடப்பட்டதும் உண்டு.

பண்டு 'ரோமுலஸ்' என்ற உரோமப் பேரரசன் காலத்தில் பத்து மாதங்களே இருந்தன. மார்ச்சு முதல் மாதமாகும். பத்து மாதங்களுக்கும் உரிய மொத்த நாட்கள் 304 நாட்களாகும். அப்போது, செப்தெம்பர் ஏழாவது மாதம்; 'செப்த்தெம்'(Spetem) என்னும் இலத்தீன் சொல்லுக்கு ஏழு என்பது பொருள். ஒக்தோபர் எட்டாவது மாதம், ஒக்த்தோ' (Octo) என்னும் இலத்தீன் சொல்லுக்கு எட்டு என்பது பொருள். நொவெம்பர் ஒன்பதாம் மாதம்; 'நொவெம்' (Novem) என்னும் இலத்தீன் சொல்லுக்கு ஒன்பது என்பது பொருள். தெசெம்பர் பத்தாம் மாதமாகும்; 'தெசெம்' (Decem) என்னும் இலத்தீன் சொல்லுக்குப் பத்து என்பது பொருள். பிரெஞ்சு, சம்சுகிருதம் முதலிய மொழிகளிலும் இந்த எண்ணுப் பெயர்ச் சொல்லுருவங்கள் இந்தப் பொருளில் உள்ளமையைக் காணலாம். முன்பு ஏழாவது மாதமாக இருந்த செப்தெம்பர் இப்போது ஒன்பதாவதாகவும், எட்டாவதான ஒக்தோபர் இப் போது பத்தாவதாகவும் ஒன்பதாவதாக இருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/146&oldid=1323741" இலிருந்து மீள்விக்கப்பட்டது