பக்கம்:தைத் திங்கள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130 தைத் திங்கள்


நொவெம்பர் இப்போது பதினோரா வதாகவும், பத்தாவ தான தெசெம்பர் இப்போது பன்னிரண்டாவது மாத மாகவும் மாறியிருக்கும் விந்தையைக் காண்கிறோம். ஏழாவது மாதமாகிய செப்தெம்பருக்கு முன்னால் ஜூலை, ஆகஸ்ட் என்னும் இரண்டு மாதங்கள் இடையே புகுத்தப்பட்டதால், செப்தெம்பர் முதலிய மாதங்கள் இரண்டிரண்டு எண்கள் வீதம் பின்னுக்குத் தள்ளப்பட்டன. அதனால் மாதங்களும் பன்னிரண் டாயின.

மன்னர் 'ரோமுலஸ்' காலத்திலிருந்து பத்து மாதங் களாக இருந்த ஆண்டமைப்பை, ஜூலியஸ் சீசர் என்னும் உரோமப் பேரரசன் பன்னிரண்டு மாதங்களாக்கினான். இவன் எகிப்தை வென்றபோது, அங்கு ஆண்டுக்கு 365 நாட்கள் கொண்ட 'நாள் காட்டி’ (பஞ்சாங்கம்) இருப்பதைக் கண்டு தானும் அவ்வாறே சீர்திருத்தி அந்த முறையை கி.மு. 46-ஆம் ஆண்டு சனவரி முதல் நாள் தொடங்கி ரோமநாட்டிலும் நடை முறைக்குக் கொண்டு வந்தான்.

மாதங்களின் பெயரமைப்பிலும் அன்று பல மாறுதல்கள் செய்யப்பட்டன. ஐந்தாவது மாதத்திற்கு 'குயின்டிலியுஸ்' என்னும் பெயர் இருந்தது; 'குயிங்க்' (Quinque) என்னும் இலத்தீன் சொல்லுக்கு ஐந்து என்பது பொருள். ஆறாவது மாதத்திற்கு 'செக்ஸ்டிசஸ்' என்னும் பெயர் இருந்தது; 'செக்ஸ்' என்னும் இலத்தீன் சொல்லுக்கு ஆறு என்பது பொருள். ஐந்தாவது மாதம், ஆறாவது மாதம் என்னும் பொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/147&oldid=1323742" இலிருந்து மீள்விக்கப்பட்டது