பக்கம்:தைத் திங்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134 தைத் திங்கள்


கொண்டது ஒரு மாதம். இந்த அடிப்படையில் மாதத்திற்குத் 'திங்கள்' என்னும் பெயர் வழங்கப் பட்டுள்ளது.இந்த முறைக்கு வடமொழியில் 'சாந்திர மானம்' என்று பெயர் வழங்குவர். சீவக சிந்தாமணி காந்தருவதத்தையார் இலம்பகத்தில் உள்ள 'இங்கிவர்கள் இவ்வா றிருந்தினிது வாழ' என்னும் (முதல்)பாடலின் உரையில், நச்சினார்க்கினியர் வரைந்துள்ள,

"பன்னிரு மதியின்' என்றும் 'ஆறிரு மதியின்' என்றும்...தேவன், 'மதியின்’ என்று மதியைக் கூறினமையின், சாந்திரமான பட்சம் பற்றிக் கூறினான் என்றும் உணர்க."

என்னும் உரைப் பகுதி காண்க. மதி எனினும் திங்கள் எனினும் சந்திரன் எனினும் ஒன்றேயாகும். இவ்வாறு சந்திரனது போக்கை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடுவது 'சாந்திர மானம்' ஆகும். இதனைத் தமிழில் 'திங்கள் முறை' எனலாம். சித்திரை முதலாகப் பங்குனி ஈறாக நாம் வழங்கும் பன்னிரு திங்கள் பெயர்களும் திங்கள் முறையை யொட்டி யெழுந்த வழக்காறாகும். சிலர், சித்திரைத் திங்கள், வைகாசித் திங்கள் என்று சொல்வதற்குப் பதிலாக, மேட மாதம், இடப மாதம் எனக் கூறுவர். பழைய சேர நாடாகிய மலையாளத்திலும் இதனைக் காணலாம். இவ்வாறு இராசியின் பெயரால் மாதத்தை வழங்குவது 'செளர மானம்'எனப்படுகிறது. சூரியனது போக்கை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடுவது 'செளர மானம்' ஆகும். இதனைத் தமிழில் 'ஞாயிறு முறை' என வழங்கலாம். ஆனால் தமிழர்கள் திங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/151&oldid=1323746" இலிருந்து மீள்விக்கப்பட்டது