பக்கம்:தைத் திங்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

XV



சாண்றாண்மையும் புலமைப் பெருமிதமும் இனமானமும் மிக்க இப்பெரியார் நினைவாகப் புதுவை அரசு அறக் கொடை நிறுவி ஆய்விருக்கை அமைத்துத் தக்க வகையில் சிறப்புச் செய்திட வேண்டுகிறேன்.

---முனைவர் சோ.ந.கந்தசாமி

அறிவுத் திறனும் சிந்தனைத் திறனும் எழுத்துத் திறனும் வாய்ந்த இவர் நூல்கள் தமிழுக்கு அணிகலன்கள் அல்ல, படைக்கலன்கள்; ஆராய்ச்சியாளர்க்கு வேண்டிய அனைத்துப் பண்புகளும் அமையப்பெற்ற திரு. சுந்தரசண்முகனார் நம் காலத்தில் வாழ்வது நமக்குப் பெருமை. அறிவுநலம் சான்ற பெரு நூல்களைப் படைப்பது இவருக்குக் கைவந்த கலை.

பதிப்புச்செம்மல், பேராசிரியர், முனைவர். ச. மெய்யப்பன்.

ஐம்பது ஆண்டுகளாகப் பாவேந்தர் பாரதிதாசன் பாடியது போல அன்னைத் தமிழ் மொழிக்குத் துறை தொறும் துறைதொறும் துடித்தெழுந்து அருந்தொண்டாற்றிய பேராசிரியர் சுந்தரசண்முகனார் அவர்களுக்குத் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்ற பட்டத்தினை வழங்கி மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் பெருமை கொள்கிறது. நாள்: 17. 10. 1991

எளிமையான வாழ்வு, உடை, இரக்க உணர்வு, பேச்சில், மூச்சில், எழுத்தில் தமிழ் பற்றிய சிந்தனை, பணத்திற்கும் பதவிக்கும் விலைபோகாமல் இருத்தல், உன்னதமான படைப்பாற்றல், கடைசிவரை சலியாத உழைப்பு இவையெல்லாம் புரட்சியாளர் பேராசிரியர் சுந்தர சண்முகனாரிடம் நாம் கற்றுத் தெளிய வேண்டிய பாடங்கள்.

பேராசிரியர் துரை. சம்பந்தனார்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/16&oldid=1323575" இலிருந்து மீள்விக்கப்பட்டது