பக்கம்:தைத் திங்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தைத் திங்கள்


பொங்கல் விழா

எப்போது வரும்?

பொங்கல் எப்பொழுது வரும்-பொங்கல் எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப் பவர்கள் சிறுவர் சிறுமியர் மட்டுமல்லர்; பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெரியவர்களும் அவ்வாறே பொங்கலை எதிர்பார்ப்பது மரபு. சிற்றுண்டி நிலையத்திற்குச் சென்று ஒரு பொங்கல் கொண்டுவா’ என்று கேட்டுவிட்டு, 'பொங்கல் எப்பொழுது வரும்-பொங்கல் எப்பொழுது வரும்' என்று நெடுநேரம் எதிர்பார்த்துத் துடித்துக் கொண்டிருப்பவரைப் பற்றி இங்கே சொல்லவில்லை; தைப் பொங்கலை எதிர்பார்ப்பவர்களைப் பற்றியே இங்கே பேசப்படுகிறது.

பொங்கல் விழா வரின் விடுமுறை கிடைக்கும் விளையாடலாம் என்று எதிர்பார்க்கும் இளஞ்சிறார் ஒருபுறம்; பொங்கல் வரின் பொங்கல் உணவு உண்டு புத்தாடை உடுத்து மகிழலாம் என்று எதிர்பார்க்கும் இளையோர் ஒருபுறம்; பொங்கல் வரின் வெவ்வேறு வகையான விழாக்கள் வரும்-அவ்விழாக்களில் கலந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/18&oldid=1323579" இலிருந்து மீள்விக்கப்பட்டது