பக்கம்:தைத் திங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

3

சென்று வைரக் கணையாழியும் கைக்கடிகாரத்திற்குத் தங்கச் சங்கிலியும் பெற்று வரலாம் எனப் பேராவல் கொண்டிருக்கும் புது மாப்பிள்ளைமார் மற்றொரு புறம் பொங்கல் வந்துவிடின், அமிழ்தினும் இனிய காதலியை நம் பெற்றோர் மணம் பேசி முடித்துவைப்பர் என எண்ணமிட்டுக் கொண்டிருக்கும் இளங் காளையர் ஒரு புறம். இவர்கள் மட்டுமா?

பொங்கல் வரின், மருமகளுக்குக் கப்பல் கப்பலாகப் பொங்கல் வரிசை வரும் என வாய் பிளந்து காத்துக் கொண்டிருக்கும் மாமியார்கள் ஒரு சாரார். பொங்கல் வந்து விடின், நம் மகனுக்கு ஒரு குறுநில மன்னனின் மகள் கிடைப்பாள்; பெண் வீட்டார் ஒரு தீவையே எழுதி வைத்து விடுவார்கள்; மகனுக்குத் திருமணமும் செய்து வைத்து விடுவார்கள் என்று எதிர்பார்த் திருக்கும் மாப்பிள்ளை வீட்டார் ஒரு சாரார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்களே-இந்தப் பொங்கல் வந்தாலாவது நம் மகள் கழுத்தில் தாலி ஏறாதா? - நல்ல மாப்பிள்ளை கிடைக்க மாட்டானா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் பெண் வீட்டார் ஒரு சாரார்.


இவ்வாறாகப் பல்வேறு தரப்பினரும் பொங்கல் எப்போது வரும் என்று எதிர்பார்த்துக் கொண் டிருப்பது இயற்கை. மற்ற விழாக்கள் போல் இல்லாமல், பொங்கல் விழா ஆண்டுதோறும் இயற்கை யாகத் தையில் முதல் நாளே வந்துவிடுவது, எதிர் பார்த்துக் கொண்டிருப்பவர்கட்கு ஓர் ஆறுதலாகும். நல்ல தைப் பொங்கல்! வாழ்க!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/20&oldid=1323581" இலிருந்து மீள்விக்கப்பட்டது