பக்கம்:தைத் திங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

7


"இந்தத் தைத்திங்கள் நாளிலே நம் மனைவி இரவு என்னும் மாபெருங் கடலைத் தனியாக நீந்தி ஊரிலே இருக்கிறாள், நாமோ, உருவிய வாளை உறையில் போடாது இரவு முழுதும் தூக்கம் இன்றிக் காத்து நிற்கின்ற படையுடன் நம் மன்னனின் பாசறையில் இருக்கிறோம்."

-என்று அவன் ஏங்குகிறான். இதனை அகநானூற்றில் உள்ள,


     “...... தைஇ நின்ற தண்பெயற்
      கடைநாள்
    வயங்குகதிர் கரந்தவாடை வைகறை......
      பணியிருங் கங்குலும் தமிய நீந்தித்
      தம்மூ ரோளே நன்னுதல் யாமே......
      கழித்துறை செறியா வாளுடை
      எறுழ்த்தோள்
      இரவுத்துயில் மடிந்த தானை
      உரவுச்சின வேந்தன் பாசறை யேமே"

என்னும் (24-ஆம்) பாடல் பகுதியால் அறியலாம். தைத் திங்களில்-பொங்கல் விழாவில் மனைவியுடன் ஊரில் இருப்பதற்கில்லையே! தைப் பொங்கலுக்கு வந்து விடுவதாகச் சொல்லிப் புறப்பட்டோமே! முடியவில்லையே! என ஏங்குகிறான். தைத் திங்களின் இன்றியமையாமையை இந்த அகப்பாடல் அறிவிக்கின்றது.

இன்னொரு குடும்பத்தில் - தைத் திங்களில் வந்து விடுவதாகத் தலைவிக்கு உறுதி கூறித் தலைவன் வெளிநாடு போந்தான். தைத் திங்கள் நெருங்கி விட்டது; ஆனால் தலைவன் வரவில்லை. தலைவி தோழியிடம் முறையிட்டுத் துடிக்கிறாள். தலைவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/24&oldid=1323588" இலிருந்து மீள்விக்கப்பட்டது