பக்கம்:தைத் திங்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

9


வருகை இன்றியமையாதது என்பதனை இந்தப் பாடலும் உணர்த்துகிறது.

மற்றொரு குடும்பத்தில், தைத் திங்கள் எதிரே யிருக்கத் தலைவன் வேற்று நாட்டிற்குச் செல்லத் திட்டமிட்டான். இந்த நாளில் அவன் செல்வதைத் தலைவி விரும்பவில்லை. அதனால் தோழி அவனிடம் கூறுகிறாள்:- "இந்தத் தைத் திங்கள் நாளிலே வீட்டை விட்டு நீங்காதே ஐயா! உனக்குப் பொங்கல் வாழ்த்து உரித்தாகுக."- இது தோழியின் வேண்டு கோள். இதனை,

"நீங்கல் வாழியர் ஐய......
தைஇ நின்ற பொழுதே"

என்னும் (124-ஆம்) நற்றிணைப் பாடல் பகுதி நயம்பட நவில்கிறது. தைத் திங்களில் பிரிந்திருக்கும் தலைவன் எதிர்பார்க்கப்படுவதையும், வீட்டில் இருக்கும் தலைவன் பிரியாதபடி நிறுத்தப்படுவதையும் மேலே கண்டோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தில் இருந்த பழக்க வழக்கங்களை நமக்குத் திரைப்படம் பிடித்துக் காட்டுபவர் யாவர்? இந்த அரும்பணியை நம் பழம்பெருந் தமிழிலக்கியங்களே ஆற்றுகின்றனவன்றோ?

'இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்' என்றபடி, இந்த இலக்கியச் செல்வங்களை அடிப்படையாகக் கொண்டு, தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியர் இது சார்பான கருத்தை மிகவும் அழகாக எடுத்துக் காட்டியுள்ளார். அரசாங்க வேலையாக வேற்று நாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/26&oldid=1323590" இலிருந்து மீள்விக்கப்பட்டது