பக்கம்:தைத் திங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14 தைத் திங்கள்


இன்று நம் பெண்டிர் 'பொங்கல் மாசம்' என்னும் பொலிவு மிக்க பெயரால் வழங்குவதும் நேர்த்தியாய்த் தான் இருக்கிறது.

அணிசெயல்:

மார்கழி பிறந்ததுமே பொங்கல் வேலைகள் நடை பெறத் தொடங்கிவிடும். கூரை வீடுகளில் மேலே புதுக்கூரை வேய்வார்கள். மண் சுவர்களில் புதுமண் கரைத்துப் பூசி மெழுகுவார்கள். மண் தரையையும் அவ்வாறே மண் கரைசலால் பூசி மெழுகி ஒழுங்கு செய்வார்கள். அதன்மேல் சாணத்தால் மெழுகுவது அப்புறம் நடைபெறும். மாட மாளிகை கூட கோபுரங்களில் வாழ்பவர்களுக்கு இதைப் படிக்கும்போது என்னவோபோல் இருக்கும். இன்றும் சிற்றூர்களில் பெரும்பாலான வீடுகள் கூரை வீடுகளே என்பது நினைவிருக்க வேண்டும். கூரை வீட்டுச் சுவரிலேயே வெள்ளையடிப்பதும் உண்டு. வெளித் திண்ணைகளிலும் படிகளிலும் வெள்ளையும் சிவப்பும் மாற்றி மாற்றிப் பட்டை பட்டையாக அடித்து அணி செய்வதும் உண்டு. இவ்வாறு வெள்ளையடித்து விளக்கம் செய்வது கல் வீட்டிலும் நடைபெறும்; மாட மாளிகைகளிலும் நடைபெறும்.

கோலம் போடுதல்:

மார்கழி முதல் நாளிலிருந்தே மங்கையர் தெரு முற்றத்தில் மாக்கோலம் போடத் தொடங்கிவிடுவர். வண்ண வண்ணக் கோலங்கள் கண்ணைக் கவரும். இந்தத் துறையில் கைதேர்ந்த வல்லுநர்கள் (Experts)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/31&oldid=1323595" இலிருந்து மீள்விக்கப்பட்டது