பக்கம்:தைத் திங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16 தைத் திங்கள்


கிடைக்கும் பூக்களின் எண்ணிக்கைக்கு ஏற்பக் கோலத்தில் பல இடங்களில் வைக்கப்படுவதுமுண்டு. இதற்காக வைகறையில் சிலர் பூசணிப் பூ விற்பதும் உண்டு. சிலர் நாடோறும் வாடிக்கையாகப் பூக்கொடுத்துச் சென்று பின்னர் பொங்கலன்று வந்து மொத்தமாகப் பணம் பெற்றுக்கொள்வர்.

நண்பகல் நெருங்கும் நேரத்தில் பூவையும் சாணத்தையும் சேர்த்து வறட்டிபோல் தட்டி எடுத்து வைத்துக்கொள்வர். நாடோறும் இவற்றைத் தனியாக எடுத்து வைத்திருந்து, பெரும்பொங்கல் நாளன்று, பொங்கல் ஆக்கும் பொங்கல் அடுப்பில் இட்டு எரிப்பர். சில பகுதிகளில் மூன்று திங்கள் (மாதம்) கணக்காக வேண்டும் என்பதற்காக, கார்த்திகைத் திங்களின் இறுதியிலேயே பூச்சாணம் வைக்கத் தொடங்கி விடுவர். கார்த்திகை, மார்கழி, தை முதல் நாள், ஆக மூன்று திங்கள் கணக்காகிறது அல்லவா? 'பெண் பிள்ளைக் கணக்கு' என்கிறார்களே அதுதான் இது. இந்தப் பூச்சாணத்துடன் கூடிய கோலத்தின் பொலிவே பொலிவு!

பொங்கல் கோலம்:

இவ்வாறு சிறப்புக் கோலம் போடுதல் பொங்கல் வரையிலும் நீடிக்கும். பொங்கலோடு சிறப்புக் கோலமும் முடிவுறும். பின்னர் வழக்கம்போல் ஆண்டு முழுவதும் வெறுங் கோலமே இடம்பெறும். மார்கழித் திங்களிலே உதிரி மாவினால் கலையக் கூடிய கோலம் போட்டு வந்தவர்கள், பொங்கல் விழா நாளிலே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/33&oldid=1323597" இலிருந்து மீள்விக்கப்பட்டது