பக்கம்:தைத் திங்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

தைத் திங்கள்


என்னும் (9-ஆம்) நற்றிணைப் பாடல் பகுதியில் உள்ளமை காண்க. இளங் காதல் மனையாட்டியுடன் வழிப்பயணம் செய்யும் காதலன் அவளுக்குக் கூறுகிறான். 'என் இனிய காதலியே! வழிநடைக் களைப்பால் நீ சோர்ந்து போக வேண்டா! நிழல் கண்ட இடத்தில் நெடுநேரம் தங்கி ஓய்வெடுத்துக் கொள்க!மணல் கண்ட இடத்தில் 'வண்டல்' என்னும் மணல் விளையாட்டு ஆடுக! இங்ஙனம் பொழுது போக்கி வருந்தாது வருக!'- என்று ஆறுதல் கூறுகிறான். இந்தக் காலத்தில் என்றால் 'ஸ்கூட்டரில்' பின்னால் அமர வைத்து அழைத்துச் செல்வான்! அந்தக் காலத்தில என்ன செய்வது! நடந்துதானே செல்ல வேண்டும்! எனவேதான் ஆறுதல் கூறுகிறான். இந்தப் பாடலில், வண்டல் விளையாட்டு ஆடுவதற்கு 'வண்டல் தைஇ' என்னும் வழக்காறு வந்துள்ளமை காண்க.

மற்றும்,காதலர்கள் கடற்கரை மணலில் வண்டல் விளையாட்டு ஆடியும் அலைகளை எற்றியும் இன்பப்பொழுது போக்கியதாக நற்றிணையில்'வண்டல்தைஇயும்வருதிரைஉதைத்தும்'
என்னும் (254-ஆம்) பாடலில் கூறப்பட்டுள்ளது. இன்னும், அகநானூற்றில் உள்ள 'கோதை ஆயமொடு வண்டல் தைஇ ஓரை ஆடினும்' என்னும் (60-ஆம் பாடல்) பகுதியும், 'வளைவாய்க் கோதையர் வண்டல் தைஇ இளையோர் செல்ப' என்னும் (370-ஆம்) பாடல் பகுதியும் ஈண்டு ஒப்புநோக்கற் பாலன. இந்த வழக்காறுகளால், 'தை' என்னும் சொல்லுக்கு உள்ள விளையாட்டு என்னும் பொருள் பெறுமானத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/41&oldid=1323608" இலிருந்து மீள்விக்கப்பட்டது