பக்கம்:தைத் திங்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போகி விழா


மார்கழி பிறந்ததுமே 'பொங்கல் மாசம்’ வந்து விட்டது எனப் பெண்கள் கூறுவார்கள் என முன்னர் அறிவிக்கப்பட்டது. பொங்கல் மாசம் என்பது மார்கழியைக் குறிக்காது; தைத் திங்களையே குறிக்கும். இருப்பினும், தைப் பொங்கலுக்கு வேண்டிய ஆயத்தங்களை முன்கூட்டிச் செய்யும் திங்கள் ஆதலால் மார்கழி வந்ததும் 'பொங்கல் மாசம்' வந்து விட்டது என்று கூறும் மரபு ஏற்பட்டது.பொங்கலுககு ஆயத்தம் செய்யும் மாதந்தான் மார்கழி மாதம். பொங்கல் மாசம் என்பது தைத்திங்களேயாகும். தைப் பொங்கலின் முன்னாயத்தம் மார்கழி என்பதைப் பறை சாற்றுவதுபோல், மார்கழித் திங்களின் இறுதி நாளில் போகி விழா நடைபெறுகிறது. இந்தப் போகியை, மார்கழியையும் தையையும இணைககும் ஒரு பாலமாகக் கொள்ளலாம்.பொங்கல் விழாவிற்காக இல்லங்களைத் தூய்மை செய்யும் பொலிவு நாளாகப் போகி நாள் திகழ்கிறது.

போகி மூட்டம்:

போகி விழா ஊருக்கு ஊர் ஒவ்வொரு விதமாகவும் வீட்டுக்கு வீடு வெவ்வேறு விதமாகவும் நடை பெறலாம். இருப்பினும், பொதுவான சில கூறுகள் இல்லாமற் போகா. போகியன்று வைகறையில் பழம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/43&oldid=1323610" இலிருந்து மீள்விக்கப்பட்டது