பக்கம்:தைத் திங்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சண்முக சுந்தரனார்

27


பொருள்களை எரிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். தீ முட்டி, அதில் பழைய கூடை, முறம், பாய், விசிறி மட்டை, தடுக்கு துடைப்பம் முதற்கொண்டு போட்டு எரிப்பார்கள். துணைக்கு விறகு, மரக்கட்டைகள் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்வதுண்டு.

'வைகுண்ட ஏகாதசி விரதத்திற்குச் சாப்பாடு துளசி தீர்த்தந்தான்; அதற்குத் தொட்டுக்கொள்ளப் புளியோ தரை, ததியோதனம், வடை முதலியனவாம்’என்று வேடிக்கைக்குச் சொல்வதுண்டு. அவ்வாறே, பழம் பொருள்களைப் போட்டு எரிப்பது போகி மூட்டம் என்று பேர் சொல்லிக் கொண்டு, பெரிய பெரிய மரக் கட்டைகளையெல்லாம் போட்டு எரிப்பது இளைஞர்களுக்கு ஒரு வேடிக்கை. இதற்கென்று விறகு தேடும் படலமே நடைபெறும்.

சிற்றூர்களில் சிறார்களும் இளைஞர்களும், போகி மூட்டத்திற்காக, கார்த்திகைத் திங்களிலிருந்து விறகு திரட்டத் தொடங்கி விடுவர். தெருவிலே விற்பனைக்காக வரும் விறகு வண்டி க்காரர்களிடம் குறைந்தது ஒரு விறகு வீதமாயினும் வாங்கி ஊர்க்கோயிலின் ஓரிடத்தே சேர்த்து வைத்துக் கொண்டு வருவர். போகியின் முதல் நாளில் வீடுதோறும் சென்று விறகு கேட்டு வாங்கிக்கொண்டு வந்து குவிப்பர். காடு மேடுகளில் சென்று சுள்ளிகள் பொறுக்கிக்கொண்டு வருவதும் உண்டு.

இவ்வாறு திரட்டிய எரிபொருள்களைப் போகியின் முதல் நாள் நள்ளிரவே கொளுத்தத் தொடங்குவர். விடிந்தால் போகிநாள். சிற்றூர்களில் கோயில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/44&oldid=1323612" இலிருந்து மீள்விக்கப்பட்டது