பக்கம்:தைத் திங்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

தைத் திங்கள்


கட்கு எதிரே போட்டுக் கொளுத்துவர். அந்தந்தத் தெருவினர் அந்தந்தத் தெருக் கோயிலுக்கு எதிரேயுள்ள போகி மூட்டத்தில் பங்கு கொள்வர். ஒவ்வொரு தெருவினரும் போட்டி போட்டுக் கொண்டு தத்தம் மூட்டங்களை விரிவுபடுத்துவர். எங்கள் தெரு மூட்டம் நூறடி உயரம் எரிந்தது-எங்கள் மூட்டம் இருநூறடி உயரம் எரிந்தது-என்றெல்லாம் ஒருவர்க்கொருவர் வீம்பு பேசுவதுண்டு. இரவு முழுதும் இளைஞர்கள் ஒவ்வொரு மூட்டமாகச் சுற்றிப் பார்த்துக்கொண்டு வருவர்; வேறொரு தெருவில் மூட்டம் தங்கள் மூட்டத்தினும் பெரிதாயிருக்குமாயின், அதனினும் தங்கள் மூட்டத்தைப் பெரிதாக்கத் திட்டமிட்டு வீடுகளிலுள்ள எரிபொருள்களை யெல்லாம் திரள் திரளாகக் கொண்டு வந்து குவிப்பர். மூட்டம் வானளாவும். 'பட்டாசு 'முதலிய வெடிபொருள்களை மூட்டத்தில் போட்டு வெடிக்கச் செய்வதும் உண்டு. எங்கள் தெரு மூட்டத்தை நள்ளிரவு ஒரு மணிக்கே கொளுத்தி விட்டோம் என்பார் ஒருவர்; நாங்கள் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கே கொளுத்திவிட்டோம் என்பார் இன்னொரு தெருவினர். மற்றவர் மூட்டத்தினும் முந்திக் கொள்வதற்காக இளைஞர்கள் முன்னிரவிலிருந்தே தூங்காதிருப்பதும் உண்டு. பொங்கல் விழாவை இளைஞர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதிலுள்ள ஆர்வத்தின் காரணம் இப்போது புலனாகலாம்.

மேலே கூறிய நிகழ்ச்சி ஒரு சிலர் அறியாத ஒன்றாகும். சில பகுதிகளில் போகி மூட்டம் போடுவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/45&oldid=1323614" இலிருந்து மீள்விக்கப்பட்டது