பக்கம்:தைத் திங்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 தைத் திங்கள்

வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே"

என்பது தொல்காப்பிய (அகத்திணையியல்-5) நூற்பா. இதிலுள்ள 'வேந்தன் மேய தீம்புனல் உலகம்' என்பது கருதத்தக்கது. இத்தொடருக்கு, 'இந்திரன் காதலித்த தண் புணல் நாடு' என நச்சினார்க்கினியர் பொருள் வரைந்துள்ளார்; இதைத் தொடர்ந்து அவர் மேலும் எழுதுகிறார்:

"இனி ஊடலுங் கூடலுமாகிய காமச் சிறப்பு நிகழ்தற்கு மருத நிலத்திற்குத் தெய்வமாக 'ஆடலும் பாடலும் ஊடலும் உணர்தலும்' உள்ளிட்ட இன்ப விளையாட்டு இனிதின் நுகரும் இமையோர்க்கும் இன் குரல் எழிலிக்கும் இறைவனாகிய இந்திரனை ஆண்டையோர் விழவு செய்து அழைத்தலின் அவன் வெளிப்படும் என்றார். அது,

'வையைப் புதுப்புனல் ஆடத் தவிர்ந்தமை
தெய்வத்திற் றேற்றித் தெளிக்கு'
(கலி-98)

என, இந்திரனைத் தெய்வம் என்றதனானும், இந்திர விழவூர் எடுத்த காதையானும் உணர்க';

என்பது நச்சினார்க்கினியர் உரைப்பகுதி. இது காறும் கூறியன கொண்டு, இந்திர விழா இயற்கை யாகத் தமிழகத்திற்கு உரியது எனவும், கண்ணனது தொடர்பால் வந்த தன்று எனவும் உணரலாம்.

நடைமுறை:

போகி விழா பெயரளவுக்கு இந்திரனுக்கு உரிய தாகச் சொல்லப்படினும், சில ஊர்களில்-சில கும்டுபங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/49&oldid=1323621" இலிருந்து மீள்விக்கப்பட்டது