பக்கம்:தைத் திங்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34 தைத் திங்கள்

அப்பால் சிறிது தொலைவில் சுவரில் பூசைபோட்டுப் பொட்டிட்டு, அந்த இடத்தைக் காத்தவராயனுக்கு உரிய இடமாகக் கற்பனை செய்து இலைபோட்டு உணவு வகைகள் வைத்துப் படைப்பர். புலால் உண்பவர்கள் வீட்டில், காத்தவராயனுக்குப் புலால் உணவும் படைக்கப்படும். வழக்கமாகப் படைக்கும் இடத்தில் மரக்கறி உணவும், காத்தவராயனுக்கு உரிய இடத்தில் புலால் உணவும் ஒரே நேரத்தில் வைத்துப் படைக்கப்படும். காத்தவராயனுக்கு மது, சுருட்டு முதலியன வைத்துப் படைப்பதும் உண்டு. மது அருந்தாதவரும் காத்தவராயனுக்கு மது படைத்து. பின்னர் அதனை யாருக்காவது எடுத்துக் கொடுத்து விடுவர்.

இவ்வாறு இன்னும் பல்வேறு வகைகளில் போகி யன்று படையல்கள் நடைபெறுவதுண்டு. இந்தப் படையல் நடைமுறைகளை நோக்குங்கால், இஃது இந்திரனுக்கு உரிய வழிபாடாய்த் தோன்றாமல், அவரவர் வீட்டுத் தெய்வத்திற்கு-மரபுவழியான குல தெய்வத்திற்குச் செய்யும் வழிபாடாகத் தோன்றுகிற தல்லவா? இந்திரனோ சந்திரனோ? யாருக்காயிருந் தாலென்ன? ஏதோ தெய்வப் படையல் நடைபெறு கிறது. அவ்வளவோடு அமைய வேண்டியதுதான்.

வட தமிழ் நாட்டிலேதான் போகி விழா மிகவும் சிறப்பாகவும் பெரிய அளவிலும் கொண்டாடப்படுவ தாகத் தெரிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/51&oldid=1323624" இலிருந்து மீள்விக்கப்பட்டது