பக்கம்:தைத் திங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 தைத் திங்கள்

நடப்பதில்லை. எனவே. பெரும் பொங்கல் இடும் வீட்டினரால், பெரும் பொங்கல் இடாத வீட்டினர் விருந்தினராக அழைக்கப்பெற்றுச் சிறப்பிக்கப் பெறுவர், உறவினர் அல்லாத மற்றையோரும் பங்கு பெறுவர். ஏழை எளியவரும் பசியாறி மகிழ்வர்.

பொங்கல் நீர்:

பொங்கலன்று அரிசி களைந்த நீர் உயர்வாகப் போற்றப்பெறும். சில பகுதிகளில் இந்த நீரைக் கொண்டு போய் நிலத்தில் தெளிப்பது வழக்கம். வேறு சில பகுதிகளில் படைத்த மஞ்சள் நீர் கொண்டு போய் நிலத்தில் தெளிப்பர். இதனால் நிலம் வளம் பெறும் என்பது நம்பிககை. இதற்குப் பொலி நீர், பலி நீர் என்றெல்லாம் பெயர் சொல்கினறனர்.

பொங்கல் மேடை:

பொங்கல் படைத்த மேடை 'பொங்கல் மேடை’ எனப்படும். இது தூய்மையாகப் போற்றப்பெறும். பொங்கல் நாளையடுத்து ஒரு நல்ல நாள் பார்த்துப் பொங்கல் மேடைக்குப் படைப்பார்கள். சுண்டல், கொழுக்கட்டை முதலியன செய்து படைப்பதுண்டு. படைத்த பின்னரே பொங்கல் மேடையமைப்பைக் கலைப்பார்கள். வெட்டிய அடுப்பு வாயையும் அன்றே மூடி ஒழுங்கு செய்வார்கள்.

பொங்கல் பானை:

பெரும் பொங்கல் செய்வோர் வீட்டுப் பொங்கற் புதுப்பானை மிகவும் பெரியதாயிருக்கும். அடுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/55&oldid=1323632" இலிருந்து மீள்விக்கப்பட்டது