பக்கம்:தைத் திங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார் 39

ஆண்டுப் பொங்கல் வரையிலுமாவது இந்தப் பானை உடையாமல் போற்றிக் காக்கப்பெறும். சில வீடுகளில், ஆண்டு தோறும் சேர்ந்த பொங்கல் பானைகள் களிற்றி யானை நிரை போல் அடுக்கடுக்காகக் காட்சியளிக்கும். இவ்வாறாகப் பெரும் பொங்கல் சிறப்புறக் கொண்டாடப் பெறும்.

தை ஊண்:

தைத் திங்களின் தொடக்கத்தில் நடைபெறும் விழா பொங்கல் விழா எனப்படுகிறது. பொங்கல் என்னும் சொல், எல்லா வளங்களும் பொங்குதல்பெருகுதல் என்னும் பொருளைக் குறிப்பதல்லாமல், பொங்கிச் செய்யும் உணவையும் குறிக்கிறது. பல நாடுகளில் நடைபெறும் அறுவடை விழா போன்றது எனச் சொல்லப்படும் உழவர் திருநாளாகிய பொங்கல் விழாவில் சிறப்பிடம் பெறுவது பொங்கல் உணவு விருந்தாகும். அறுவடை முடிந்து வீடுவந்து சேர்ந்த புது நெல்லரிசியைப் புதுப்பானையில் இட்டுப் பொங்கிப் 'பொங்கல் உணவு' செய்து உண்பதினாலேயே இது 'பொங்கல் விழா' என்னும் சிறப்புப் பெயர் பெற்றது என்று கூறுவதில் தவறொன்றும் இல்லை. இத் தைப் பொங்கல் உணவு தமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாகச் சிறப்பாகச் செய்யப்பெற்று வருகிறது என்பதற்குச் சங்க நூலாகிய நற்றிணையில் சான்று உள்ளது.

ஒரு மலைச்சாரலில் பெண் குரங்கு ஆண் குரங்குடன் சேர்ந்து கொண்டு தினைக் கதிர்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/56&oldid=1323633" இலிருந்து மீள்விக்கப்பட்டது