பக்கம்:தைத் திங்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் அவர்கட்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி உரித்தாகுக.

தைத் திங்கள் முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம் என்ற கருத்து இப்போது பரவலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. மலேசியாவில் 6-1-2001 அன்று அந்நாட்டின் மூன்று தேசிய அமைப்புகள் ஒன்றிணைந்து "தைத்திங்கள் முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம்" என்று பறை சாற்ற உலகப் பரந்துரை மாநாடு நடத்தினர். ஆனால் 1972-ஆம் ஆண்டே "தைத்திங்கள்” நூலில் பேராசிரியர் சுந்தர சண்முகனார் தைத்திங்கள் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொள்வதுதான் பொருத்தம் என்று ஆய்வு செய்து கூறியுள்ளார்கள். இது இந்நூலின் தனிச் சிறப்பாகும்.

இந்நூலை மறுபதிப்பு செய்யப் பெரிதும் உறுதுணையாக நின்ற "இலக்கியச் செம்மல்" புலவர் வ. ஞானப்பிரகாசம் அவர்கட்கு எங்களின் நனி நன்றி. பேராசிரியர் சுந்தர சண்முகனார் அறக் கட்டளை உறுப்பினர்கள் அனை வருக்கும் எங்கள் நன்றியை உரித்தாக்குகிறோம். நூலினை அழகுற அச்சிட்டுத் தந்த சிதம்பரம் சுபம் அச்சகத்தாருக்கும் எங்களின் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பேராசிரியர் சுந்தர சண்முகனாரின் நூல்களுக்கு எப்போதும் தமிழ் நெஞ்சங்களின் பேராதரவு இருக்கும் என்ற ஆழமான நம்பிக்கை எங்கட்கு எப்போதுமுண்டு.

புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/6&oldid=1319950" இலிருந்து மீள்விக்கப்பட்டது