பக்கம்:தைத் திங்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தைத் திங்கள்

45


இந்த விழாவில் ஊருக்கு ஊர் சிறுசிறு வேற்றுமை யிருப்பினும், பொதுவான ஒரு முறையைக் காண்பாம்: ஊர்ப்பொது வெளியில், கொம்பு கூர் சீவிய முரட்டுக் காளைகளை ஒப்பனைசெய்து கொட்டு முழக்கத்துடன் விரட்டி விடுவர். காளைகள் மிரண்டு பயந்தோடும். துணிவுமிக்க இளைஞர்கள் காளைகளின் கொம்புகளைப் பிடித்து மடக்கி ஒடுக்கி அடக்கி வெற்றி பெறுவர். வென்றவர்க்குத் தக்க பரிசு உண்டு. வீரமிக்க இச் செயல் இன்று குறைந்து விட்டது. மஞ்சு (மைந்து) என்றால் வலிமை. வீரமிக்க மைந்தர்களின் வலிமையை வெளிப்படுத்தச் செய்யும் விழாவாதலின் இது 'மஞ்சு விரட்டு' எனப்படுகிறது போலும்! இதற்கு வேறு பொருளும் இருக்கலாம். இது மஞ்சி விரட்டு, மஞ்சி வெருட்டு என்றும் வழங்கப்படுகிறது. மாடு கவர்தல் என்னும் பொருளில் 'மஞ்சி வெருட்டு' என்பது சில இடங்களில் வழங்கப்படுகிறது.

ஏறு தழுவுதல்:

கன்னியொருத்தியை மணக்க விரும்பும் காளையொருவன் ஏதேனும் ஒரு மறச் செயல் செய்து காட்ட வேண்டும் என்னும் விதி அந்த நாளில் இருந்ததாகத் தெரிகிதது. புலியைக் கொன்று அதன் பல்லைக்கொண்டு வந்து தாலியாகக் கட்ட வேண்டும் என்னும் கட்டாயம் ஒரு பகுதியில் இருந்தமையைப் 'புலிப் பல் தாலி'என்னும் வழக்காற்றால் அறிகிறோம். இந்தக் காலத்தில் புலிப்பல் கொண்டுவர வேண்டு மென்றால், நரிக்குறவனிடமிருந்தோ, கழைக்கூத்தாடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/62&oldid=1323698" இலிருந்து மீள்விக்கப்பட்டது