பக்கம்:தைத் திங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48 தைத் திங்கள்


பாடலை எடுத்துக் காட்டி நன்கு தெளிவு செய்துள்ளர். எண்பது அடிகள் கொண்ட இந்தக் கலித் தொகைப் பாடலில் முதல் அறுபத்திரண்டு அடிகளில் 'ஏறு தழுவுதல்' என்னும் நிகழ்ச்சி மிகவும் விரிவாகவும் விளக்கமாகவும் தெளிவாகவும் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.இந்த'ஏறுதழுவுதல்' என்னும் நிகழ்ச்சிக்கும் மாட்டுப் பொங்கலன்று நடைபெறும் 'மஞ்சு விரட்டு' நிகழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்புள்ளமையை உய்த்துணரலாம்.

இரவுப் படையல்:

மாட்டுப் படையல், மாடு மிரட்டுதல், மஞ்சு விரட்டு ஆகியவை மாலையில் நடைபெறும். இது போக,சில குடும்பங்களில் இரவில் தனிப்படையல் நடைபெறும். போகியன்று இரவு கடவுள் படையல் செய்தது போலவே மாட்டுப் பொங்கலன்று இரவும் செய்வர்.போகியன்று போலவே இன்றும் காத்தவராயன் படையலும் இடம் பெறும். பொதுவாக மாட்டுப் பொங்கல் நாளில் இரவுப் படையல் சில பகுதிகளில் உண்டு-சில பகுதிகளில் இல்லை; ஓர் ஊரிலேயே சில குடும்பங்களில் உண்டு-சில குடும்பங்களில் இல்லை. படைக்கும் குடும்பங்களிடையும் படையல் முறையில் வேறுபாடுகள் இருப்பதுண்டு.சிலர் இந்தப்படையலைப் பகலிலேயே நடத்துவர். மாடு வைத்திருப்பவர்கள் மட்டும் மாட்டுப் பொங்கல் நடத்துவதும் மற்றவர் நடத்தாதிருப்பதும் சில இடங்களில் உண்டு. மாடு வைத்திராவிடினும் சிலர் மாட்டுப் பொங்கலன்று சிறப்புப் படையல் செய்வர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/65&oldid=1323702" இலிருந்து மீள்விக்கப்பட்டது