பக்கம்:தைத் திங்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தைத் திங்கள்

49


பூவாடைக் காரி:

மாட்டுப் பொங்கலன்று சில ஊர்களில் சில குடும்பங்களில் ‘பூவாடைக் காரிப் படையல்'நடைபெறும்.பூவாடைக்காரி என்பது, பூச்சூடிக் கொள்ளும் கட்டு கழுத்தி (சுமங்கலி) இறந்து தெய்வநிலை பெற்றதைக் குறிக்கும், ஒரு குடும்பத்தில் பெண்ணொருத்தி கட்டுகழுத்தியாய் (சுமங்கலியாய்) இறந்துவிடின்,அவள் தெய்வமாக மதிக்கப்பெறுகிறாள்; ஆண்டுதோறும் அவளுக்கு மாட்டுப் பொங்கலன்று படையல் நடைபெறும். இதுதான் ‘பூவாடைக்காரிப் படையல்'ஆகும். இது சில குடும்பங்களில் மட்டுமே நடக்கும். சர்க்கரைப் பொங்கல், வடை பாயசம் முதலியன செய்தும், புதிய புடவை, எலுமிச்சம் பழம் முதலியன வைத்தும் படைப்பர். படைத்த எலுமிச்சம் பழத்தை அடுத்த படையல்வரையும் போற்றி வைத்திருப்பர். படைத்த புடவையைக் கட்டு கழுத்தியாய் (சுமங்கலியாய்) இருப்பவர் உடுத்துக் கொள்வர். குடும்பத்தில் உள்ள அனைவரையும் நல்லபடியாய்க் காக்க வேண்டுமெனப் பூவாடைக்காரியை வேண்டிக் கொள்வர்.

புத்தாடை:

சில பகுதிகளில் தீபாவளியைப் போலப் புத்தாடை உடுத்துவதில்லை-சில பகுதிகளில் உடுத்துவதுண்டு. புத்தாடை உடுத்தும் பகுதிகளில், சிலர் பெரும் பொங்கலன்று ஆடைகளை வைத்துப் படைத்து உடுத்துவர்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/66&oldid=1323703" இலிருந்து மீள்விக்கப்பட்டது