பக்கம்:தைத் திங்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார் 61

இவ்விழாவின் சிறப்புக் கூறு எனச் சொல்லப் படுகிறது.

கூட்டாஞ் சோறு:

பெரியவர்கள் பொங்கல் செய்து படைத்ததைப் பார்த்த சிறுவர், சிறுமியர் தாமும் தத்தம் வீடுகளிலிருந்து உணவுப் பண்டங்கள் கேட்டு வாங்கி வந்து கூட்டாகச் சேர்ந்து சிறு சோறு ஆக்கிப் படைத்து உண்டு ஆடிப் பாடி மகிழ்வது சில ஊர்களில் நடைபெறுகிறது. இதற்குக் கூட்டாஞ் சோறு ஆக்குதல்' என்று பெயராம். பெரியவர்களைப் பின்பற்றி நடத்தல் (limitation) இளையோரின் இயற்கையன்றோ?

துறை குப்பிடுதல்:

சலவைத் தொழில் புரியும் ஏகாலியரிடையே மயிலார் படைக்கும் நிகழ்ச்சி சில இடங்களில் நடைபெறு கிறது. இதற்குத் 'துறை கும்பிடுதல்' என்னும் பெயரும் உண்டு. இத்தொழிலாளர்கள் பொங்கல் முடிந்ததும் வேலை செய்ய மாட்டார்கள்; சில நாள் ஓய்வு எடுத்துக்கொள்வர். பிறகு நல்ல நாள் பார்த்து, அன்றைக்கு, வழக்கமாகத் துணி வெளுக்கும் நீர்த் துறைக்குச் சென்று பொங்கல் செய்து படையல் போடுவர். இதைச் செய்த பின்னரே வழக்கமான தொழிலைத் தொடங்குவர். நீர்த்துறையில் செய்யும் வழிபாடாதலின், இது 'துறை கும்பிடுதல்’ எனப் படுகிறது. இதனையே 'மயிலார் கும்பிடுதல்' எனக் கூறும் மரபும் உண்டு. பெண்கள் வீட்டிலே செய்யும் மயிலார் படையலுக்கும், சலவைத் தொழிலாளர் நீர்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/78&oldid=1323651" இலிருந்து மீள்விக்கப்பட்டது