பக்கம்:தைத் திங்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62 தைத் திங்கள்

துறையில் செய்யும் மயிலார் படையலுக்கும் இடையே உள்ள ஒற்றுமை-வேற்றுமைகள் எண்ணத்தக்கன.

நாள் கொள்ளுதல்:

சலவைத் தொழிலாளர்கள் நல்ல நாள் பார்த்து வேலை தொடங்குவது போலவே மற்ற தொழிலாளர் களும் செய்வது மரபு. இதற்கு 'நாள் கொள்ளுதல்' என்று பெயராம். நல்ல நாள் பார்த்து வேலையைத் தொடங்குவது நாள் கொள்ளுதலாகும். நெசவாளர்கள் உள்ள சிற்றூர்களில் மாட்டுப் பொங்கலுக்கு மறு நாளிலிருந்து யாரும் வேலை செய்யமாட்டார்கள். ஊர்க்கட்டுப்பாடு இருந்த அந்த நாளில் யாரும் வேலை செய்யவுங் கூடாது. ஒரு நல்ல நாள் பார்த்து. ஊரார் அனைவரும் ஒட்டு மொத்தமாகக் கோயிலில் பொது வழிபாடு செய்த பின்னரே வேலை தொடங்குவர். இந்த மரபு இன்னும் சில இடங்களில் இருக்கிறது. பொருள்களை நிரம்ப உண்டாக்க வேண்டும் என்னும் இந்தக் காலத்தில் இஃது ஒத்து வராதாயினும், தொழிலாளர்க்கும் ஒரு சிறிது ஓய்வு வேண்டியதுதானே!

ஆற்றுத் திருவிழா:

சில பகுதிகளில் தை ஐந்தாம் நாள் ஆற்றுத் திருவிழா நடைபெறும். வேறு சில இடங்களில் முன் பின்னாக வேறு நாளில் நடப்பதும் உண்டு. தென்னார்க்காடு மாவட்டத்தின் தலைநகராகிய கடலூரில் ஐந்தாம் நாள் நடைபெறும் ஆற்றுத் திருவிழா, பொங்கலோடு தொடர்புடைய ஒரு பெரு விழாவாகப் போற்றப்படுகிறது. அப்பகுதி மக்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/79&oldid=1320827" இலிருந்து மீள்விக்கப்பட்டது