பக்கம்:தைத் திங்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தைச் சிறப்பு நிகழ்ச்சிகள்


பன்னிரண்டு திங்கள்களிலும் வரும் கார்த்திகை, அமாவாசை, பூசம், சப்தமி முதலிய நாள்கள் தைத் திங்களில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் பெறுகின்றன. இந்த நாட்களில் பல ஊர்களில் சிறப்பு விழாக்கள் நடைபெறும்.

தைக் கார்த்திகை:

கார்த்திகைத் திங்களில் கார்த்திகை நாள் மிக்க சிறப்புடன் பெருவிழாவாகக் கொண்டாடப் படுவதற்கு அடுத்தபடியாகத் தைத் திங்களிலேதான் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வீடுகளில் சிறப்புப் படையல் இருக்கும். முருகன் கோயில்களில் சிறப்பு விழா நடை பெறும். முருகக் கடவுள் திருமேனி ஊர்வலமாக வரும்.

தை அமாவாசை:

தைக் கார்த்திகையைப் போலவே தை அமாவாசையும் வீடுகளிலும் கோயில்களிலும் சிறப்பாகக் கொண் டாடப்படுகிறது. சில ஊர்களில் தை அமாவாசையன்று ஆற்று நீராடலும், சில இடங்களில் கடல் நீராடலும் நடைபெறும். கோயில்களிலிருந்து இறையுருவங்கள் நீர்த் துறைகளுக்கு எடுத்துச் செல்லப்பெற்று விழா நடத்தப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/81&oldid=1323654" இலிருந்து மீள்விக்கப்பட்டது