பக்கம்:தைத் திங்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66 தைத் திங்கள்

 சில குடும்பங்களில் தைப் பூசத்தில் சிறப்புப் படையல் நடைபெறும். சிலர் இல்லங்களில், பெண்டிர் இரவு முழுதும் கண் விழித்துச் சிறப்பு உணவு ஆக்கி, கதிரவன் புறப்படுவதற்கு முன் வைகறையிலே படைப்பர். இந்தப் படையல் செய்வதற்கென்று சில சிறப்பு முறைகள் உண்டு. இதற்குப் பூசப் பாவாடை என்று பெயர் சொல்வர். உற்றார் உறவினருடன் வைகறையிலேயே பூசப் பாவாடை விருந்து நடை பெறும்.

சில ஊர்க் கோயில்களில் ஆடையில் உணவு பரப்பிப் படைக்கும் பூசப் பாவாடை விழா மிகவும் சிறப்பாக நடைபெறும். பொதுவில் ஊர்க் கோவிலில் பூசப் பாவாடை போட்டு ஊரார் அனைவரும் கோவிலிலேயே பகிர்ந்து பல்லாரோடு உண்பதும் உண்டு, இந்தப் பூசப் பாவாடைக்கென்று முன் கூட்டியே வீடு தோறும் அரிசி முதலிய உணவுப் பண்டங்கள் தண்டிச் சென்று ஊர்ப் பொது விழாவாக நடத்துவர்.

தைப் பூசத்தன்று ஆற்றில் நீராடுதல் பெரும்பயன் நல்கும் என்பது மக்கள் நம்பிக்கை. காவிரி, வைகை, தாமிரபருணி, பெண்ணையாறு முதலிய ஆறுகளில் நீராடுவது ஆங்காங்குள்ள சிற்சில பகுதிகளில் நடை பெறுகிறது.

தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவிடை மருதூரில் தைப் பூசத்தில் நீராடுதல் மிகவும் சிறப்பு விழாவாக நடை பெறுகிறது. இதனை, ஏழாம் நூற்றாண்டின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/83&oldid=1323658" இலிருந்து மீள்விக்கப்பட்டது