பக்கம்:தைத் திங்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

67


முற்பகுதியில் வாழ்ந்த திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரின் திருவிடை மருதூர்த் தேவாரப் பதிகங்களாலும் அறியலாம்:

"வருந்திய மாதவத்தோர் வானோர் ஏனோர் வந்தீண்டிப்
பொருந்திய தைப்பூசம் ஆடி உலகம் பொலிவெய்தத்
திருந்திய நான்மறையோர் சீராலேத்த இடைமருதில்
பொருந்திய கோயிலே கோயி லாகப் புக்கீரே”

"வாசம்கமழ் மாமலர்ச் சோலையில் வண்டே
தேசம் புகுந்தீண்டி ஓர் செம்மை யுடைத்தாய்ப்
பூசம் புகுந்து ஆடிப் பொலிந்து அழகாய் ஈசன் உறைகின்ற இடை மருது ஈதே"

இவை சம்பந்தர் தேவாரப் பாடல்கள்.

"பாசம் ஒன்றிலராய்ப் பல பத்தர்கள்
வாச நாண்மலர் கொண்டு அடி வைகலும்
ஈசன் எம்பெருமான் இடை மருதினில் பூசம்நாம் புகுதும் புனல் ஆடவே"

இது நாவுக்கரசர் தேவாரம். இப்பாடல்களால், தைப் பூசத்தில் நீராடுவதால் உலகம் பொலிவு பெறும், என்னும் செய்தி புலனாகும். இந்நாளில் இறை வனுக்குத் தெப்பத் திருவிழாவும் உண்டு,

பூசம் தேவ ஆசானுக்கு உரிய நாளாம். தைப் பூசத்தின் சிறப்பு காரணமாகப் பூசத்திற்குத் 'தை' என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. இச்செய்திகளை, திவாகர நிகண்டின் தெய்வப் பெயர்த் தொகுதியிலுள்ள,

"கொடிறு, காற்குளம், சுரர்குருநாள், வண்டு,
புணர்தை, ஆகும் பூசநாள் பெயரே"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/84&oldid=1323664" இலிருந்து மீள்விக்கப்பட்டது