பக்கம்:தைத் திங்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68 தைத் திங்கள்


என்னும் நூற்பாவாலும், பிங்கல நிகண்டின் வானவர் வகை என்னும் தொகுதியிலுள்ள,

"குருநாள், காற்குளம், கொடிறு, வண்டு,
புணர்தை, ஆகும் பூசநாட் பெயரே.”

என்னும் நூற்பாவாலும் அறியலாம். 'புணர் தை' என்னும் தொடர் ஈண்டு எண்ணத்தக்கது. தைத் திங்கள் கடக ஓரையில் பூசத்தில் நிலா (சந்திரன்) தன் சொந்த வீட்டில் முழுமையாய்த் தங்கி ஒளி வீசு வதாகக் கூறப்படுகிறது. இதுகாறுங் கூறியவற்றால் தைப் பூசத்தின் தனிப் பெருஞ் சிறப்பு விளங்கும்.

தைப் பூச விழாவிற்குப் பெயர் பெற்ற சிற்சில ஊர்கள் ஆங்காங்கு உள்ளன. முருகன் திருப்பதிகள் சிலவற்றில் இவ்விழா காவடி செலுத்துதலுடன் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சில ஊர்களில் அன்பர்கள் காவடி எடுத்து ஆடிப்பாடிக் கொட்டி முழக்கிச் செல்வது அழகாயிருக்கும். இந்த நாளில் சில ஊர்க் கோயில்களில் இடும்பன் பூசனையும் நடைபெறும். இடும்பன் பூசனையிலும் ஊரார் ஒன்று கூடிப் பகிர்ந்து பல்லாரோடு உண்ணுதல் நடைபெறுவ துண்டு.

தைப் பூசம் இவ்வாறு பல்வேறு சிறப்புடைய தாகத் திகழ்வதால்தான் திருஞானசம்பந்தர் தமது தேவாரத்தில் மயிலாப்பூர்ப் பதிகத்தில்,

'தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்' எனப் பூம்பவையை நோக்கி வினவுவதாகப் பாடி யுள்ளார். இதனால் தைப் பூசத்தின் பெருமை புலப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/85&oldid=1323667" இலிருந்து மீள்விக்கப்பட்டது