பக்கம்:தைத் திங்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70 தைத் திங்கள்


பெரும்பாலும் பார்ப்பனர், ஆரிய வைசியர் போன்ற சில பிரிவினரிடையே இரத சப்தமி கொண்டாட்டம் மிகுதியாகக் காணப்படுகிறது. இவ்விழா கொண்டாடு பவர் பொங்கல் நாளன்று போலவே இந்த நாளிலும் திறந்த வெளியில் பொங்கல் செய்து கதிரவனுக்குப் படைத்து உண்டு களிக்கின்றனர், இரத சப்தமியன்று சில பகுதிகளில் ஆற்றுத் திருவிழா நடைபெறுகிறது. கடலூரில் இதைக் காணலாம். சுற்று வட்டாரத்து ஊர்க் கோயில்களிலிருந்து இறையுருவங்கள் பெண்ணை யாற்றங்கரைக்கு எடுத்து வரப்பெறும். மக்கள் பெருந் திரளாகக் குழுமி நீராடி வழிபாடு செய்வர்.

அம்மன் கோவில் விழா:

சில ஊர்களில் தைத் திங்களில் சிறப்பாக அம்மன் கோயில்களில் விழா நடைபெறும், ஐந்தாம் வெள்ளிக் கிழமையன்று, தீ மிதி விழா,தேர்த் திருவிழா முதலியன ஊருக்கேற்ப நடைபெறும், சில ஊர்களில் 'செடல்' திருவிழாவும் நடக்கும் பெண்கள் அம்மன் கோயிலுக்குச் சென்று அங்கேயே பொங்கல் இட்டு மா விளக்குப் போட்டுப் படைத்து வருவர்.

ஐயனார் கோயில் விழா:

இத் திங்களில் சில இடங்களில் ஐயனார் கோயில் விழா நடைபெறும். ஐயனார் கோயிலுக்குப் புதுக் குதிரை வைப்பதாக நேர்ந்துகொண்டவர்கள் அவ்வாறு குதிரை செய்து கொண்டுபோய் வைப்பர். சில பகுதிகளில் ஊரார் அனைவரும் சேர்ந்து பொதுவாகக் குதிரை செய்து வைப்பதும் உண்டு. இதற்குக் குதிரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/87&oldid=1323671" இலிருந்து மீள்விக்கப்பட்டது