பக்கம்:தைத் திங்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72 தைத் திங்கள்


தை பிறந்தால் வழி பிறக்கும்:

தை பிறந்ததும், பொங்கல் விழாவும் அதைத் தொடர்ந்து பல்வேறு சிறப்பு விழாக்களும் நடை பெற்று மக்களுக்கு மகிழ்ச்சியளிபபது ஒரு புறம் இருக்க,-தை பிறந்ததும் பல புது வினைகள் தொடங்க வழி பிறக்கிறது; பல துயரங்களுக்கும் சிக்கல்களுக்கும் வழி பிறக்கிறது. இயற்கையின் கொடுமைகளிலிருந்து விடுபட வழி பிறக்கிறது. பசி, பகை, வறுமை, பிணி, கடன் முதலியன நீங்கவும் வழி பிறக்கிறது. எங்ஙனம் வழி பிறக்கிறது?

ஆவணித் திங்களிலிருந்து கார்காலம் தொடங்குகிறது. அதிலிருந்து மார்கழித் திங்கள் வரையிலும், மககள், பெரு மழையாலும் பெரும் புயலாலும் வெள்ளத் தாலும் ஓடை உடைப்பாலும் பனியாலும் குளிராலும் இவை காரணமாகத் தோன்றிய தொற்று நோய் வகையாலும் படாத பாடு பட்டுவந்தனர். பலர் வீடிழந்தனர்; பலர் மாடிழந்தனர்; பலர் உணவின்றி வருந்தினர். தெருக்களும் பாதைகளும் நடப்பதற்கு இயலாதனவாயின. எந்தத் தொழிலையும் தொடங்கிச் செவ்விய முறையில் செய்ய இயற்கை இடந்தர வில்லை.

இந்த நிலையில் தை பிறந்ததும், மேற்கூறிய இயற்கைப் பகைகள் இருக்குமிடம் தெரியாமல் ஒழிந்தன. இனிப் புயல் இல்லை; வெள்ளமில்லை. தகுந்த பருவநிலை தொடங்கலாயிற்று. மழை பெய்து முடிந்த கடைநாள் பகுதியில் தைத் திங்கள் வருகிறது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/89&oldid=1323673" இலிருந்து மீள்விக்கப்பட்டது