பக்கம்:தைத் திங்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. 1949 - 58 தமிழ்த்துறைத் தலைவர், பெத்தி செமினேர் மெட்ரிக்குலேசன் ஆங்கிலப் பிரஞ்சுக் கல்விக்கூடம், புதுச்சேரி.

3. 1958 - 80 தமிழ்த்துறைத் தலைவர். அரசினர் ஆசிரியர் பயிற்சி மையம், புதுச்சேரி.

4. 1982 - 83 பேராசிரியர், தொகுப்பியல் துறைத் தலைவர், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.

5. வாழ்நாள் உறுப்பினர், கல்விக்குழு, மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

பெற்ற சிறப்புப் பெயர்கள்:

1. இயற்கவி - “செந்தமிழ் ஆற்றுப்படை" நூலுக்காக நாவலர் சோமசுந்தர பாரதியார் வழங்கியது.

2. செந்தமிழ்ச் செம்மல் - புதுவைத் தமிழ்ச் சங்கம்.

3. புதுப்படைப்புக் கலைஞர் - தொகுப்புக்கலை நூல் பாராட்டு விழாவில் புதுவை ஆளுநரால் அளிக்கப் பெற்றது.

4. செந்தமிழ்க் கொண்டல் - புதுவை சுப்பிரதீபக் கவிராயர் மன்றம்.

5. ஆராய்ச்சி அறிஞர் - சிவத்திரு ஞானியார் மடாலயம், திருப்பாதிரிப்புலியூர்.

6. தமிழ்ச் சான்றோர் - சேலம் தமிழ்ச் சங்கம், தமிழகப் புலவர் குழுவின் வெள்ளி விழாவில் வழங்கியது.

7. திருக்குறள் நெறித்தோன்றல் - தமிழக அரசு வழங்கியது.

8. குறளாயச் செல்வர் - ஈரோடு குறளாய இயக்கத்தின் புதுவைக்கிளை வழங்கியது.

9. தமிழ் ஆய்வுக் கடல் - தமிழகச் செங்குந்தர் பெரு மன்றம் அளித்தது.

10. முனைவர் - உலகப் பல்கலைக் கழகம். அமெரிக்கா.

11. தமிழ்ப் பேரவைச் செம்மல், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/9&oldid=1319960" இலிருந்து மீள்விக்கப்பட்டது