பக்கம்:தைத் திங்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

75

அதற்கு மைத்துனர், 'பொங்கல் போகட்டும் பார்க்கலாம்' என்று பதில் சொல்லி வைப்பார். பொங்கல் போனதும் மாப்பிள்ளையின் தந்தைமைத்துனர் வீட்டுக்குச் சென்று, 'போகியும் போச்சு-பொங்கலும் போச்சு-பெண்ணைக் கொடு மச்சான்' -என்று கூறிப் பெண் கேட்பார். முறையே திருமணம் நடைபெறும், 'போகியும் போச்சு-பொங்கலும் போச்சு-பெண்ணைக் கொண்டாயா'-என்று சிலர் வேடிக்கையாகப் பாட்டுப் பாடுவதுண்டு.

அந்தக் காலத்தில் தைத் திங்களில் திருமண ஏற்பாடு நடைபெற்றதற்குச் சான்றாக, சங்கத் தொகை நூலாகிய நற்றிணையில் ஒரு சுவடு விடப் பட்டுள்ளது:-காளையொருவன் கன்னியொருத்தியைக் காதலித்தான்; அவளுக்குக் கையுறையாகத் தழையும் தாரும் தந்தான், அவள் அவனையே மணக்க வேண்டுமென உள்ளத்தில் வரித்துக் கொண்டாள். இதை யறிந்த தோழிமார் கேலிசெய்கின்றனர். அவள் பெரிதும் நாணப்படுகிறாள். அதே தலைவன் தவறாது தனக்குக் கிடைக்க வேண்டுமென நோன்பு கொண்டு தைத் திங்களிலே வைகறையில் தண்ணிய நீரிலே குளித்து முழுகித் தவங்கிடக்கிறாள். அவள் அல்லாமல் தன் காதல் நோய்க்கு வேறு மருந்து இல்லை என அவனும் ஏங்குகிறான். இச்செய்தியை, நற்றிணையிலுள்ள,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/92&oldid=1323679" இலிருந்து மீள்விக்கப்பட்டது