பக்கம்:தைத் திங்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தைந் நீராடல்

 நீராடுங் கலை:

இந்தக் காலத்தில் நாகரிகம் என்னும் பெயரால் 'நீச்சல் குளங்கள்' (Swimming Pools) அமைக்கப்பட்டுள்ளன. நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்து நீராடி வருவது. பெருமை மிக்க நாகரிகச் செயலாகக் கருதப் படுகிறது. அமெரிக்க-.ஆலிவுட் நீச்சல் கலை மிகவும் பெரிது படுத்திப் பேசப்படுகிறது. ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழகத்தில் நீராடுதல் ஒரு கலையாகத் திகழ்ந்த பேருண்மை பலருக்குத் தெரிய வழியில்லை. மணிமேகலை என்னும் பெருங்காப்பியத்தில், மணிமேகலை என்னும் கட்டிளங் கன்னி கற்றிருந்த கலைகளாகக் காப்பியப் புலவர் சாத்தனாரால் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் நீராடுதலும் ஒரு தனிப்பெருங்கலையாகச் சேர்க்கப்பட் டுள்ளது. இதனை மணிமேகலையில், ஊரலர் உரைத்த காதையில் உள்ள,


     "...கந்துகக் கருத்தும் மடைநூல்
     செய்தியும்
     சுந்தரச் சுண்ணமும் தூநீ
     ராடலும்...
     நாடக மகளிர்க்கு நன்கனம்
     வகுத்த
     ஓவியச் செந்நூல் உரைநூல்
     கிடக்கையும்
     கற்றுத் துறைபோகிய பொற்றொடி
     நங்கை."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/94&oldid=1323681" இலிருந்து மீள்விக்கப்பட்டது