பக்கம்:தைத் திங்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

79


தன் காதலி காதலில் வீறு காட்டாததாகக் குறைபட்டுக் கொள்ளும் காதலன், அவளை நோக்கிக் கூறுகிறான்: 'காதல் வேதனையால் யான் மயங்கி விழுவேனாயின், இந்தப் பெண்ணால் வந்த வினையே இது என்று அயலவர் நின்னைப் பழிக்கத் தொடங்குவர்; அந்தப் பழி உனக்கு வரின், நல்ல கணவர் கிடைக்க வேண்டுமென வேண்டித் தோழிமாருடன் நீ நோன்புக் கோலம் பூண்டு தைத் திங்களில் நீராடிய தவத்தின் பயன் உனக்குக் கிட்டாமற் போகும்’-என்று அவன் அவளுக்கு உணர்த்துகிறான். இதனை,


    "மருளியான் மருளுற இவனுற்றது
     எவனென்னும்
     அருளிலை இவட்குஎன அயலார்நிற் பழிக்குங்கால்
     வையெயிற் றவர்காப்பண் வகையணிப் பொலிந்துநீ
     தையில் நீராடிய தவம்
     தலைப்படுவாயோ"

என்னும் (59-ஆம்) கலித்தொகைப் பாடல் பகுதி அறிவிக்கிறது. 'தையில் நீராடிய தவம்’ என்னும் தொடர், பொருள் பொதிந்தது. இந்தப் பாடல் பகுதியால், கன்னியர் தையில் நீராடுவதின் நோக்கமும் பயனும் புலனாவதோடு, தையில் நீராடுதல் ஒருவகைத் தவ-நோன்பு என்பதும் புலப்படும்.

அம்பா ஆடல்:

தைத் திங்களில் நீராடுதலுக்கு 'அம்பா ஆடல்'என்ற பெயர் உள்ளமையைச் சங்க நூலாகிய பரிபாடலால் அறிய முடிகிறது. அம்பா என்றால் தாய் என்று பொருளாம். தாயுடன் கன்னியர் நீராடுதலின் 'அம்பா ஆடல்' எனப்பட்டதாம். பனி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/96&oldid=1323686" இலிருந்து மீள்விக்கப்பட்டது