பக்கம்:தைத் திங்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

படர்ந்த வைகறையில் கன்னியர் தாயருடன் தைத் திங்களில் நீராடுவராம். இதனை, பரிபாடலில் உள்ள,


     "வெம்பா தாக வியனில வரைப்பென
    அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்
முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப்
     பனிப் புலர்பு ஆடி-"

என்னும் (11-ஆம்) பாடல் பகுதியால் அறியலாம். அம்பா என்றால் தாய்; அம்பா ஆடல் என்றால் தாயோடு நீராடல் எனப் பரிமேலழகர் பொருள் கொண்டு, 'அம்பா ஆடலென்று தைந் நீராடற்குப் பெயராயிற்று, தாயோடாடப் படுதலின்' என்று உரை எழுதியுள்ளார். அம்பா என்றால் தாய் எனின், அம்பா ஆடல் என்றால் தாய் நீராடுதல் என்றுதானே பொருள்படும்? தாயோடு நீராடுதல் என்று பரிமேலழகர் கூறியிருப்பது எங்ஙனம் பொருந்தும்? எனவே, இதற்கு வேறு பொருள் இருக்க வேண்டும். கன்னியர் துணைக்குத் தாயரை அழைத்துச் சென்று அருகில் வைத்துக் கொண்டு நீராடுதல் இயற்கையேயாகும். அதனால் அதற்கு 'அம்பா ஆடல்' என்று பெயர் சொல்லி விட முடியாது. கன்னியர் நீராடும்போது, 'அம்பா-அம்பா' என்று சொல்லிக்கொண்டு ஆடியிருப்பர். அம்பா என்பது அம்பிகை என்னும் பொருளில் பெண் தெய்வத்தைக் குறிக்கலாம்.அல்லவா? எனவே, 'அம்பா-அம்பா' என்று அம்மனை வேண்டிக் கொண்டு நீராடியதால் அதற்கு 'அம்பா ஆடல்' என்னும் பெயர் வழங்கப்பட்டிருக்கலாம். பெண்கள் அம்மானைக் காய் விளையாட்டு ஆடும்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/97&oldid=1323688" இலிருந்து மீள்விக்கப்பட்டது