பக்கம்:தைத் திங்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82 தைத் திங்கள்


“தாமிள மகளிரைக் காமஞ் செப்பி
அஞ்சல் செல்லாது நெஞ்சுவலித் தாடுமிந்
நங்கையர் நோற்ற பொங்குபுனல் புண்ணியம்
நுங்கட்கு ஆகென நுனித்தவை கூறி
நேரிழை மகளிரை நீராட் டயரும்
பேரிளம் பெண்டிர்...'

எனக் (1-41; 101-6) கூறப்பட்டிருப்பது ஈண்டு ஒப்பு நோக்கற் பாற்று. மற்றும், பரிபாடலில், 'முற் பிறவியில் செய்த தவத்தால் இப்பிறவியில் தைந் நீராடும் பேறு பெற்றோம்; இப்பேறு இனி வரும் பிறவிகளிலும் எய்துவதாக-'எனக் கன்னியர் வேண்டிக் கொள்வதாகக் கூறப்பட்டிப்பது மிகவும் சுவை பயக்கிறது. இதனை,


     "இன்ன பண்பின் இன் தைந்நீ
      ராடல்......
      முன்முறை செய்தவத்தின்
      இம்முறை இயைந்தேம்
      மறுமுறை யமையத்தும் இயைக"

என்னும் பரிபாடல் (11) பகுதியால் நன்கு தெளியலாம். இதுகாறுங் கூறியவற்றால், தைந் நீராடலின் தவச் சிறப்பு புலனாகும்.

தைந்நீரோ-தைந்நீர்:

அந்தக் காலத்தில் தைந் நீராடல் தமிழகத்தில் பெருவரவிற்றாக இருந்தமையை இலக்கண உரை யாசிரியர்களின் உரைப்பகுதிகளாலும் தெளிவாக அறியலாம். தொல்காப்பியம்-சொல்லதிகாரம்-கிளவி யாக்கத்திலுள்ள பெயரினும் தொழிலினும் பிரிபவை யெல்லாம் என்னும் (50-ஆம்) நூற்பாவின் கீழ் இளம்பூரணர் எழுதியுள்ள "அத்திணைக்கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/99&oldid=1323693" இலிருந்து மீள்விக்கப்பட்டது