இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3
கொஞ்ச நேரம் வேண்டும்! நிலவு
கெஞ்ச நேரம் வேண்டும்
நாளின் துளிகளில்தோளின் களிப்பைக்
கொஞ்ச நேரம் வேண்டும்!
இஞ்சி உறைப்பே வாழ்வின் உறைப்பு.- பழ
எலுமிச்சையின் புளிப்பே, புளிப்பே.
கஞ்சி செரித்த உப்பே, உப்பு. - இதைக்
கண்டு கொண்டால் வராது தப்பு.
கொஞ்ச நேரம் வேண்டும். - அதில்
கூவும் குயிலும் வேண்டும்.
'நெஞ்சம்’ என்னும் மாய ஏனம், - கடவுள்
நெடுங்க ரங்கள் தந்த தானம்!