பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

வ.கோ. சண்முகம்

நஞ்சு ஊற்றியே நிரப்ப லாமா? - அதில்
நாளும் அருளை நிரப்ப லாமே?
கொஞ்ச நேரம் வேண்டும் . வாழ்வு
கொஞ்ச நேரம் வேண்டும்.

படிக்கும் தமிழெல்லாம் பாமணமாக - உறவால்
பழகும் சுற்றமும் பூமணமாக
பிடிக்கும்கை என்றுமே திருமணமாக - ஞானப்
பிஞ்சுகள் வாஞ்சைப் பெருமணமாக

கொஞ்ச நேரம் வேண்டும்! - நிலவு
கொஞ்ச நேரம் வேண்டும்!
நாளின் துளிகளில்தோளின் களிப்பைக்
கொஞ்ச நேரம் வேண்டும்!