பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

வ.கோ. சண்முகம்

செவ்வாயின் ஆக்கிர மிப்பால்
திணறுகின்ற ரோகிணி போல;
ஒவ்வாத நம்பிக் கையால்
ஒடுங்குமோர் நட்பே போல;
எவ்வாறும் நிறைவே றாத
இச்சைகள் போல; முகில்கள்
கவ்வியதோர் நிலாப்போ லிருந்தாள்!
கவின்மிகு அன்னம் போன்றாள்!

வெறிகொண்டு மேலே பாயும்
வேட்டைநாய்க் கூட்டத் துள்ளே
உறவினைப் பிரிந்து வந்த
ஒற்றைப் பெண் மானைப்போல
நிறைந்தசூழ் அரக்கி யருக்குள்
நிலைகுலைந்தே அயர்ந்தி ருந்தாள்
குறைவிலாப் பொறையின் மிக்காள்
கோதிலாச் சீதை மாதா!

(அசோக வனத்துள் அருஞ்சிறைப் பட்டு / சோகப் பதுமையாய் துயர்கள் கண்ட / மாதா சீதையை ஓவிய மாக்க / ஆதிகவியாம் வால்மீகி காட்டும் / அற்புதமான உவமைகள் இவைகள்!)

(1960)