பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

வ.கோ. சண்முகம்

மின்னல் கைகளின் கோலமதோ?
விண்ணோர் படிக்கும் நூலகமோ?
முன்னால் உணர்ந்த வேகமதோ?
முழுதும் அறியாத் தாகமதோ?

எத்தனை எத்தனைக் கதைத் தொகுப்போ?
இதய ரகசியப் புதையல்களோ?
வித்தை செய்யும் வித்தகமோ?
வேதம் பெய்யும் தத்துவமோ?

ஆடி ஆடிச் சிரித்திடுவாய்!
ஆத்மப் பூவாய்ச் சிரித்திடுவாய்!
வாடிச் சுருளா வாழ்வூடே
வசந்தக் கனவாய்ச் சிரித்திடுவாய்!