பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

வ.கோ. சண்முகம்

ஆளப் பிறந்ததும் தமிழே!
அவனி முழுதும் திகழ்ந்து கமழ்ந்து - (ஆளப்...)

மூளும் கயமை சூழ்ச்சி கொன்று
மோதும் தடைகள் வீழ்த்தி நின்று
வாளும் ஏந்திப பகையை வென்று
வளர்ந்து வளர்ந்து வளர்ந்து என்றும் - (ஆளப்...)

வாழப் பிறந்ததும் தமிழே!
வையக் கலைகள் அனைத்தும் பூண்டு - (வாழப்...)